நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி ரோலில் நடித்து வரும் படம் “ஃபர்ஹானா”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரை அனைத்தும் கவனம் பெற்ற நிலையில், தற்போது படக்குழு படத்தின் செகண்ட் சிங்கிள் “ஜாரா” பாடலை வெளியிட்டு உள்ளது.

யுகபாரதி வரிகளில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோல்டி ஜோயல் இப்பாடலை பாடி உள்ளார். தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்க் : https://youtu.be/FXCtlMgRK4w