Mnadu News

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி: – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி.

இந்தியா பாதுகாப்பு படையான முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது. 17½ வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ராணுவம், விமானப்படை, கடற்படை என மும்படையில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய எடுக்கப்பட்ட இந்த அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் வேலையில் விமானப்படை, ராணுவம், கடற்படை என மும்படைகளும் களமிறங்கின. இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில்; வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தேச நலனுக்காகவும், பாதுகாப்பு படையை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்து அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More