Mnadu News

அக்னிபத் ராணுவ வீரர்கள்: வரும் 15 தேதி முதல் ஆள்சேர்ப்பு முகாம்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ராணுவத்தில், அக்னி வீரர் ஆண் காவலர் மற்றும் அக்னி வீரர் பெண் காவலர், சிப்பாய் , தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் , கால்நடை செவிலியர் உதவியாளர், இளநிலை சேவை அதிகாரிபணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் வரும் 15 தேதி முதல் 29 தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களும்; பங்கேற்கலாம்.
http://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் குறிப்பாக உறுதிமொழி பத்திரம எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.
முழுவதும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் பணிசேர்ப்பு நடைபெறும். இதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடின உழைப்பும், தயார்முறை மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends