அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு கடுமை அடைந்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெமதிகாட் பகுதியில் அபாய அளவை கடந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்து உள்ளது. பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளநீரானது புதிய பகுதிகளிலும் புகுந்து உள்ளது. அசாம் வெள்ளப்பெருக்கால் 16 மாவட்டங்களை சேர்ந்த 4 லட்சத்து 88 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More