அசாமில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. அதே போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடும் காரணத்தால், நெமதிகாட் பகுதியில் அபாய அளவை கடந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என மத்திய நீர் ஆணையம் அறிவித்து உள்ளது. இதே போல, பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடுவதோடு, கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளநீரானது புதிய பகுதிகளிலும் புகுந்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அசாம் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் சுமார் 16 மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அசாமில் வெவ்வேறு பகுதிகளில் அதிக மழை பொழிவும் மற்றும் இடி, மின்னலும் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் பண்ணைகள், போன்ற பல்வேறு பாதிப்புகளை அசாம் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.