வெள்ளம் குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கச்சார், டர்ராங், திமாஜ், திப்ருகர், கோல்கட், ஹோஜாய், லக்கிம்பூர், நாகான், நல்பாரி, சோனிட்பூர், டின்சுகியா மற்றும் உடல்குரி மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 33 ஆயிரத்து 400க்கும் அதிமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லக்கிம்பூர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 142 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்து 511 ஹெக்;டேர் பரப்பளவிலான பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.அதே நேரம், நேமாகதிகாசடில் பிரம்மபுத்திரா நதியும், அதன் துணை நதிகளான புதிமாரி என் ஹெச் ரோடு கிராஸிங்கிலும், கமபுரி நதி கோபிலியிலும் அபாய அளவினையும் தாண்டி ஓடுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More