Mnadu News

அஜித்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கும் ஹீரோ இவரா?

மகிழ் திருமேனி:

முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரீ கொடுத்தவர் மகிழ் திருமேனி. தொடர்ந்து பல நம்பிக்கை அளிக்கும் படங்களின் வாயிலாக தற்போது வரை நிலைத்து நிற்கிறார்.

தரமான படங்கள் :

தடையறத் தாக்க, மீகாமன், குற்றம் 23, தடம், கலகத் தலைவன் போன்ற பல படங்களின் அபார ஸ்கிரீன் பிளே மூலம் கவனம் ஈர்த்தவர். அதே போல சில முக்கிய படங்களில் டப்பிங் கொடுத்து அதிலும் முத்திரை பதித்து உள்ளார்.

பிரம்மாண்ட வாய்ப்பு :

விஜய்யின் 65 படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்க வேண்டிய சூழலில் அந்த பட வாய்ப்பு கை நழுவி போனது. ஆனால், அஜித்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. தற்போது லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டு படம் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்காக மகிழ் திருமேனி அவர்களுக்கு ₹10 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை 70 நாட்களில் முடித்து இந்த வருட இறுதிக்குள் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

சிம்புவை இயக்கும் மகிழ் திருமேனி :

அஜித்தின் படத்தை இயக்கும் முன்பே சிம்பு படத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், அதற்குள் இவருக்கு அஜித் பட வாய்ப்பு வர, சிம்பு படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், விடாமுயற்சி முடிந்த உடன் அப்படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends