2023 பொங்கல் ஒரு சிறந்த பண்டிகையாகவே அமைய போகிறது. ஏனென்றால், சுமார் 8 வருடங்களுக்கு பிறகு அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன.
வாரிசா? துணிவா? என ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டு வரும் நிலையில், தற்போது இன்னொரு படமும் பொங்கல் ரேஸில் குதிக்க உள்ளது. அது விமல், யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள படம். அடுத்து வரும் மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் 23 அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல துணிவு படத்தின் முதல் சிங்கிள் அடுத்த மாதம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.