Mnadu News

அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும்:பிரதமர் மோடி உறுதி.

யூனியன் பிரதேசமான சில்வாசா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் சிலருக்கு வீட்டு சாவிகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தேசிய கல்வி மருத்துவ அமைப்பு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து பேசியுள்ள பிரதமர், சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள்; கடந்தும் டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை. அதோடு, நாட்டை ஆண்டவர்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி கவலைப்படவே இல்லை.அதே நேரம், இந்த சிறிய யூனியன் பிரதேசத்தை வளர்ப்பதன் மூலம் தங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஆனால், 2014 ஆம் ஆண்டில், நாங்கள் அர்ப்பணிப்புடனும் எங்கள் சேவையை தொடங்கியதின் விளைவால் தற்போது, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி அதன் முதல் தேசிய கல்வி மருத்துவ அமைப்பு மருத்துவக் கல்லூரியை பெற்றுள்ளது. ஆதே சமயம், கடந்த 9 ஆண்டுகளில், நாட்டில் ஒரு புதிய பாணியிலான பணியை உருவாக்கியுள்ளோம்.அத்துடன், புதிய பணி கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளோம். தற்போது, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பணிகளை முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

Share this post with your friends