Mnadu News

அடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி அறிமுகம்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் எனப்படும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, பேருந்து நிறுத்தம் தொடர்பான ஒலிப்பான் மூலம் அறிவிக்கும் திட்டத்தை பல்லவன் இல்லத்தில், அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பின்னர், இந்த வசதி கொண்ட பேருந்தில் பயணித்தனர்.
இது விரைவில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும். பேருந்து நிறுத்தத்துக்கு 300 மீட்டருக்கு முன்னதாக, அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் ஒலிப்பான்கள் மூலம் அறிவிக்கப்படும் வசதியால், புதிதாக ஒரு வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும். ஏற்கனவே, புறநகர் ரயில்களில், அடுத்த ரயில் நிலையம் குறித்த அறிவிப்பு வெளியிடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரயில் பயணிகளுக்கு மிகுந்த பயணளிப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends