தனுஷ், செல்வராகவன் பற்றி :
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர்கள் தனுஷ், செல்வராகவன். ஆரம்பமே அமர்க்களமாக ஆனது. அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே இவர்களின் முகம் வெளிச்சம் பெற துவங்கியது.

தனுஷ் – செல்வா காம்போ:
துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி பரவலான ரசிகர் கூட்டத்தை பெற்றது.

நடிகர் செல்வராகவன் :
இயக்குநர் செல்வராகவன் சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், சாணிக்காயிதம் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது.

ஒரே நாளில் இருவரின் படங்கள் :
தனுஷ் நடிப்பில் வாத்தி படமும், செல்வா நடிப்பில் பகாசூரன் படமும் வரும் 17 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் முறையாக இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
