பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் பங்கு சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் குற்றம்சாட்டியது. அதில் அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி செபி மேற்கொண்டு வந்தது.இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வந்த போது, செபி கூடுதல் அவகாசம் கோரியது.அதையடுத்து. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More