அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியது. உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்ற உள்ளனர்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More