அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாரத ராஷ்டிர சமிதி எம்.பி. நம நாகேஷ்வர ராவ்வும், மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சிவதாசன், கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் உள்ளிட்டோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த மறுக்கப்பட்டால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More