கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அப்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது என்றும், 36,082 பேர் அறிகுறியற்றவர்களாக இருக்கின்றனர் என சுகாதர அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.
உள்ளூரில் மட்டுமே 39,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி நேற்றைய எண்ணிக்கையை விட உயர்வு கண்டுள்ளது. நேற்று புதிதாக பதிவான 35,183 பேரில் 3,474 பேருக்கு அறிகுறி தென்படுகிறது.
சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால், மொத்த உயிரிழப்பு 5,233 ஆக உயர்ந்து உள்ளது. சீனாவில் நேற்று வரை மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.