அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபர்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர் மாவட்டங்களில் வரும் 15-ஆம் தேதி கன முதல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, இந்த மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதோடு;, ராணுவம், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சூழலில், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More