அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் உள்ளனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார்.
தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, ஒப்பந்ததாரர்களுக்காக நடத்தப்படும் கட்சி அ.தி.மு.க என்று குற்றம் சாட்டி மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு அதிமுக டி.டி.வி. தினகரன் வசமாகும். டி.டி.வி. தினகரன் கையில் அ.தி.மு.க. சென்றிருந்தால் ஸ்டாலின் முதல் அமைச்சராகியிருக்க மாட்டார்” என்று தெரிவித்தார்.