Mnadu News

அதிமுக பொதுக்குழு வழக்கு: டிச.,15க்கு ஒத்திவைப்பு.

சென்னை கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி செயல்பட முடியாத நிலை உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆஜராகாத காரணத்தினால், வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு இனறைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய அலுவல் நேரம் முடிவடைந்ததால் வழக்கு வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More