அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது, உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.