அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் முதலில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஞ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும், வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More