அத்திக்கடவு – அவினாசி திட்டம் மற்றும் சேலம் சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது; கூட்டத்தில் பேசிய அமைச்சர்;, அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் தற்சமயம் சுமார் 97 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் ஆயிரத்து 65 கிலோ மீட்டரில் சுமார் ஆயிரத்து 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகள் முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 2022-க்குள் அனைத்து பணிகளும் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.அதே சமயம்ஈ சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பேசி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More