வெய்யில், அங்காடித் தெரு, ஜெயில் என தொடர்ந்து மூன்று படங்களில் வசந்த பாலனுடன் இணைந்து பணியாற்றியவர் ஜி வி பிரகாஷ் குமார்.
இவரின் இசை வாழ்வை துவக்கி வைத்தவர் வசந்த பாலன். இதில் ஜெயில் படத்தில் கதையின் நாயகனாக ஜி வி நடித்து இசையும் அமைத்து இருந்தார். இந்த படம் பல நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்பொழுது இந்த கூட்டணி மீண்டும் அநீதி படத்தின் மூலம் இணைந்துள்ளது. இதில் ஜி வி இசையில் வரும் 31 அன்று முதல் பாடல் கார்த்திக் நேத்தா வரிகளில் வெளியாகிறது. தங்கலான், வாடிவாசல் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.