Mnadu News

அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை: காங்கிரஸ் விமர்சனம்.

காங்கிரஸ் கட்சி;யின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர் தான் மத்திய அரசு விழித்திருக்கிறது.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது, அவரின் கோழைத்தனத்தையும், அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாததையும் உணர்த்துகிறது. இவ்வளவுக்கும் பல்வேறு பிரதிநிதிகள் பிரதமருடன் பேச நேரம் கேட்டும் அவர் அதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends