அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அ
த்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.