விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் மனிதஉரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாகவும் எழுந்த புகாரின் பேரில், காப்பக உரிமையாளர் ஜிபீன் பேபி, அவரது மனைவி மரியாள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வேடம்பட்டு சிறையிலும், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேரும் தனித்தனி போலீஸ் வாகனங்களில் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அனைவரும் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 8 பேரையும் வரும் 28-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 8 பேரையும் வரும் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More