Mnadu News

அப்சர்கானுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் .

கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை ஐந்து பேரையும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஜெ.எம்.5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

அதையடுத்து போலீசார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-க்கு முழுமையாக மாற்றப்படுகிறது. மேலும், தமிழக போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டுவருவதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More