Mnadu News

அமர்நாத் பயணிகளின் முதல் குழு: யாத்ரி நிவாஸ் முகாமை அடைந்தது.

62 நாள்கள் நிகழும் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ஆம் முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, அமர்நாத் பயணிகளின் முதல் குழு யாத்ரி நிவாஸ் முகாமை அடைந்ததும் மிகுந்த உற்சாகத்தில் ஈடுபட்டனர். முகாமை சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஹல்காமின் நூன்வான் மற்றும் காஷ்மீரின் கேண்டர்பால் மாவட்டத்தில் பால்டால் என்ற இடத்திலிருந்தும் பக்தர்கள் குகைக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.அமர்நாத் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அதோடு, பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

Share this post with your friends