Mnadu News

அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் ஆரம்பம்: மனோஜ் சின்ஹா கொடியசைத்துத் தொடங்கினார்.

அமர்நாத் யாத்திரைக்கான முதல் குழு பகவதி நகர் முகாமிலிருந்து, புறப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.பல அடுக்கு பாதுகாப்பிற்கு மத்தியில் முதல் குழுவில் உள்ள 3 ஆயிரத்து 400 பக்தர்கள் இருவழித் தடங்களில் குகைக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.62 நாள்கள் நீடிக்க உள்ள யாத்திரை காஷ்மீரில் இருந்து அனந்த்நாதக் மாவட்டத்தில் பஹல்கம் வழியின் இரு தடங்கள் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்குத்தான பால்டால் வழியாகவும் பக்தர்கள் தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர்.,பக்தர்கள் பக்தி பரவசம் முழங்க ஹர ஹர மஹாதேவ் என்ற கரகோஷத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

Share this post with your friends