Mnadu News

அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை: சி.ஆர்.பி.எப் அறிவிப்பு.

.இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர்.இந்த குகை கோவிலுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வரும் ஜூலை 1ல் துவங்கி, ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை யொட்டி, ஜம்மு காஷ்மீரில் முழுவீச்சில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் என மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Share this post with your friends