Mnadu News

அமித் ஷாவின் ‘மிரட்டல்’ பேச்சு வெட்கக்கேடானது: காங்கிரஸ் சாடல்.

அமித் ஷாவின் ‘மிரட்டல்’ பேச்சுக்கு ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ”இது ஒரு வெட்கக்கேடான மிரட்டல் அறிக்கை. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு அதாவது ஆர்எஸ்எஸ்-க்கு விசுவாசமாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர், இப்போது மிரட்டல் விடுக்கிறார்.பாஜகவுக்கு தோல்வி தொடங்கிவிட்டது என்பதாலேயே தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இவ்வாறு பேசி உள்ளார்.இந்த விவகாரத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends