அமீர் இயக்குநராக அறிமுகமான படம் “மௌனம் பேசியதே”. சூரியா, திரிஷா, லைலா, நந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் நிறைவு செய்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள், அமீரின் நச் வசனங்கள், சூரியாவின் தேர்ந்த நடிப்பு என படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மெளனம் பேசியதே திரைப்படம் அனைவரது வாழ்விலும் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
20 வருடங்களை இப்படம் கடந்தாலும், அமீர் சூரியா திரிஷா லைலா எனஇவர்கள் நால்வரையும் பெரிய நட்சத்திர இடத்துக்கு கொண்டு வந்த பெருமை இப்படத்துக்கே உரித்தாகும். இன்று எல்லா சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.