நடப்பு 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பின்னான, வெபினார்கள் எனப்படும் இணையதளம் வழியேயான கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று பேசும்போது, புதிய தொழில் நுட்பம் ஆனது, ஆன்மீகம் சார்ந்த வகுப்பறைகளை கட்டியெழுப்ப உதவுகிறது. இந்த பட்ஜெட்டானது, நடைமுறையில் உள்ள மற்றும் தொழில் சார்ந்த கல்வி திட்டத்திற்கான அடித்தளம் அமைக்கும் வகையில், அதில் கவனம் செலுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இந்த அமுத கால பட்ஜெட்டில், இளைஞர்கள் மற்றும் அவர்களது வருங்காலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நமது கல்வி பிரிவானது மாற்ற முடியாத அளவுக்கு இறுகி போய் இருந்தது. அதனை மாற்றுவதற்கு நாங்கள் முயன்றோம். கல்வியை மறுசீரமைக்கும் பணிகளை செய்து, வருகிற நாட்களில் இளைஞர்களின் திறன்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில் அதனை மேம்படுத்தினோம் என்று கூறியுள்ளார். இதற்காக ஆசிரியர்களிடம் இருந்து நிறைய ஆதரவு கிடைக்க பெற்றோம். அதனால், நமது கல்வி பிரிவை சீர்திருத்தம் செய்வதற்கு அரசுக்கு ஊக்கம் கிடைத்தது. ஆசிரியங்களின் பங்கானது வகுப்பறையுடன் முடிந்து விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.
டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...
Read More