அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அமெரிகாவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றார்.அதோடு, இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி என்றார். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்ல முயல்கிறார். இந்தியர்களின் பணிக்காக வழங்கப்படும் எச்1 பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக அங்கேயே புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More