Mnadu News

அமெரிக்காவில் அறிமுகமான ‘மோடி மீல்ஸ்’ உணவு: மக்களிடையே அமோக வரவேற்பு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேச உள்ளார்.இந்த நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஹோட்டல் ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீPபாத் குல்கர்னி என்பவர் நடத்தி வருகிறார். அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தின் கோரிக்கையின் பேரில் ‘மோடி ஜி மீல்ஸ்’ என்னும் இந்திய உணவுகள் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளார் குல்கர்னி. அந்த தொகுப்பில், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கிச்சடி, ரஸகுல்லா, சர்சன் கா சாக், காஷ்மீரி டம் ஆலு, இட்லி, டோக்லா, சாச் மற்றும் அப்பளம் என பலவித பதார்த்தங்கள் உள்ளன.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More