Mnadu News

அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆற்றல், அதிக சக்தி வாய்ந்தது: ஷீலா ஜாக்சன் லீ புகழாரம்.

அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்புகளில் ஒன்றாக அமெரிக்கன்போர்இந்தூஸ் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில், அமெரிக்காவின் கேபிட்டால் ஹில் பகுதியில் முதன்முறையாக உச்சிமாநாடு ஒன்று நடந்தது. இதில், உரையாற்றியுள்ள அமெரிக்க நாடாளுமன்றவாதியான ஷீலா ஜாக்சன் லீ , அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆற்றல் சக்தி வாய்ந்தது. நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அமெரிக்கா முழுவதும் உள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். அது ஒரு சக்தி வாய்ந்த படையாக இருக்கும் என கூறியுள்ளார். அவர் தனது உரையின்போது, தெய்வீகத்தன்மையை புரிந்து கொள்வதற்காக கற்று கொண்டு இருப்பதுடன், நம் ஒவ்வொருவருரிடமும் உள்ள தெய்வீகத்தன்மைக்கான உணர்வை புரிந்து கொள்ளவும் கற்று வருகிறேன் என கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More