Mnadu News

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி,ஒருவர் கைது.

அமெரிக்காவின் கொலராடோவில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான இரவு கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் , 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு வெறுப்பால் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேளிக்கை விடுதியில் இருந்து இரண்டு நீண்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 22 வயதான ஆண்டர்சன் லீ அல்ட்ரிச் என அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends