அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அந்த நாட்டின் நியூயார்க் போன்ற பல மாகாணங்களில் என்றும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கடுமையான பனிப்புயல் தாக்கியது என தகவல் கிடைத்துள்ளது.

இதனால், கடுமையாக பாதிப்பை நியூயார்க், பென்சில்வேனியா, ஒரேகான், நெவாடா, இடாஹோ, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங், கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் சந்தித்துள்ளன. மேலும், அங்கு கடும் குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே அடங்கி உள்ளனர்.

பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.