Mnadu News

அமெரிக்கா: பிரதமர் மோடி பெயரை கார் நம்பர் பிளேட்டாக பயன்படுத்தும் தீவிர ரசிகர்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி அவர் பைடனுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வரும் ராகவேந்திரா என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகராக உள்ளார். தனது காரின் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வெளிப்படுத்தும் வகையில் என்மோடி என்ற பெயர் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வருகிறார்.

Share this post with your friends