அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024ஆம் ஆண்டு; நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.அதே நேரம், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான பணிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே மற்றும் தொழிலதிபர் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவுடன் வெளியிட்ட அறிக்கையில் , ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய தருணம் உண்டு. அவர்களின் அடிப்படை சுதந்திரத்திற்காக எழுந்து நிற்க வேண்டும். இது தான் நமது கொள்கை என நம்புகிறேன். இதனால் தான், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளேன். என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More