Mnadu News

அமெரிக்க பொருள்கள் மீதான கூடுதல் சுங்கவரி விரைவில் நீக்கம்: அமெரிக்க எம்.பி.க்கள் வரவேற்பு.

தேச பாதுகாப்பை முன்னிறுத்தி அமெரிக்காவில் எஃகு பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதமும், அலுமினிய பொருள்கள் மீது 10 சதவீதமும் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூனில் 28 அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது இந்தியா கூடுதல் சுங்க வரி விதித்தது.இந்நிலையில், பிரதமர் மோடியின் கடந்த வார அமெரிக்க பயணத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகளை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, கொண்டைக்கடலைக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கூடுதல் வரி, பருப்பு வகைகள், வால்நட், ஆப்பிள், போரிக் அமிலம், நோய் கண்டறியும் கருவிகள் ஆகிய பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.இதற்கு, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்காவின் எம்.பி.க்கள் மற்றும் தொழில் தலைவர்கள் இம்முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends