செப்டம்பர் 30 அன்று உலகமெங்கும் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடி வரும் படம் “பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று”.
மணி ரத்தினம் இயக்ககத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வசூல் சாதனை படைத்து 500 கோடிகளை திரை அரங்குகளில் வசூல் செய்தும், மற்ற உரிமங்கள் என மொத்தம் 700 கோடிகளை வசூல் செய்துள்ளது.
அடுத்த வருட ஏப்ரல் மாதத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், தற்போது முதல் பாகம் அமேசான் பிரைம் இல் வெளியாகி உள்ளது.
ஆனால், தற்போது படம் பார்க்க ₹199 செலுத்த வேண்டும் என
அமேசான் கட்டணம் நிர்ணயித்து உள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி அனைத்து சாந்ததார்களும் இலவசமாக பார்க்கலாம் எனவும் அமேசான் கூறி உள்ளது. இதனால் பிரைம் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.