தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவசர அழைப்பின் பேரில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சென்று வந்ததை பெரிது படுத்துகிறார்கள். மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார். இது போன்ற குற்றச்சாட்டை சொல்ல கூடியவர்கள் மணிப்பூரில் 6 மாத காலம் கலவரம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு சென்றதும் இல்லை. அதுபற்றி பேசியதும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக் குறைவும் இல்லை. அவர் பேச்சு வழக்கில் பேசுவது போல் பேசி உள்ளார். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.