Mnadu News

அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி மரணம்: விஷம் வைத்து கொலையா?.

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், இவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அவர்களை தடுக்க முயன்ற காவல் துறையினர் சிலர் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து, போலீசில் சரண் அடைந்த அவரும் அவரது எட்டு கூட்டாளிகளும்; அசாம் திப்ரூகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த சூழலில், அம்ரித்பால் சிங் கூட்டாளி அவதார் சிங் கண்டா. இங்கிலாந்தில் மரணம் அடைந்து கிடந்து உள்ளார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Share this post with your friends