Mnadu News

“அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் கடுமையான ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி, மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதை கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்ட வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More