மதுரை வடக்கு கிராமத்தில், 36 கோடியே 58 லட்சம் ரூபாய் வாடகையை செலுத்தாவிட்டால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து ஹோட்டல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு. குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஹோட்டலை காலி செய்து, நிலத்தை ஒரு மாதத்தில் மீட்கவும், வாடகை பாக்கியை வசூலிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More