கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள அத்திகனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அத்திகானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பத்திற்க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சுமார் 160-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அதிகம் உள்ள ஜூ.ஆர்.நகர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அத்திகானூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படிப்பதாகவும் அந்த குழந்தைகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் தகாத வார்த்தைகள் பேசியும் மாணவர்கள் முன்பு புகையிலை மற்றும் பான்பராக் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் பள்ளி சிறுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் பள்ளி குழந்தைகள் 20க்கும் மேற்பட்டோர் மத்தூர் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். இந்நிலையில் வட்டார கல்வி அலுவலர் லோகநாயகி அலுவலகத்தில் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலக அறையின் முன்பு பெற்றோருடன் மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.