Mnadu News

புதிய ஒப்புயர்வு மையக் கட்டடம்: முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை கே.கே.நகர் நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதையடுத்து, ஒப்புயர்வு மையத்தில் சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பயிற்சி வசதிகள், இயன்முறை பயிற்சி, மின்முறை சிகிச்சை ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு;, அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருவிகளையும் பார்வையிட்டார்.

Share this post with your friends