செய்தியாளர்களிடம் பேசிய அரியாணாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில், இந்த புதிய ஆடைக் கட்டுப்பாட்டு முறை பணியில் உள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் பொருந்தும். இந்த முறை வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேரப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய நடைமுறையை கடைபிடிக்காதவர்கள் பணிக்கு வந்திருந்தாலும் வராததாகவே எடுத்துக் கொள்ளப்படும். சில நேரங்களில் ஆடைக்கட்டுப்பாடு என்பது சில இடங்களுக்கு தேவையானதாக இருக்கும். அதேபோல் மருத்துவமனைக்கு இந்த புதிய ஆடைக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள் பணி ரீதியிலான ஆடை கிடையாது. அதனால் அவைகள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல டி-சர்ட்ஸ், இறுக்கமான பேண்ட் போன்றவைகளையும் அனுமதிக்க முடியாது. இந்த ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான புதிய நடைமுறை பணிபுரியும் இடத்தில் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தவே கொண்டுவரப்படுகிறது என்றார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More