டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,ராகுல், அமெரிக்கா சென்றபோது இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க விரும்பும் பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ்க்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தன்சீம் அன்சாரி என்பவர் ராகுலின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அன்சாரிக்கு ஜமாத் – இ – இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்புடன் தொடர்பு உள்ளது.அதே நேரம், ராகுலின் அமெரிக்க பயணத்தின்போது சுனிதா விஸ்வநாத்தை சந்தித்தது உண்மையா என்பது பற்றி காங்கிரசார் இன்னும் பதில் அளிக்கவில்லை. கர்நாடகாவில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கூட ஜார்ஜ் சோரஸிடம் நிதியுதவி பெற்ற ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத்தலைவர் பங்கேற்றுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More