ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வெளியிட்டார். அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150-வது பிறந்த தினம் முக்கியமான நாள் ஆகும், முழு தேசத்திற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு. அவரது சித்தாந்தத்தை நமது புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இந்த ஆண்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரவிந்தரின் வாழ்க்கை ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்’ ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். அவர் வங்காளத்தில் பிறந்தாலும், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குஜராத் மற்றும் புதுச்சேரியில் கழித்தார். எங்கு சென்றாலும் தனது ஆளுமையின் ஆழமான முத்திரையை பதித்தவர் அரவிந்தர். உத்வேகம், கடமை, உந்துதல் மற்றும் செயல் ஆகியவை ஒன்றிணைந்தால், சாத்தியமற்ற இலக்குகள் கூட தவிர்க்க முடியாததாகிவிடும். என்று அவர் கூறினார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More